Saturday, September 15, 2018

ஆதி சிவ குரு வாசியோகம்.

ஓம் நம சிவாயம்

இரக்கப்படுபவன் ஏமாற்றப் படலாம்... ஆனால், தாழ்ந்து போவதில்லை...
ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம்... ஆனால், இறுதி வரை சாதிக்க போவதில்லை...

பிறரை பற்றி புரிந்தென்ன பயன்
உன்னைப்பற்றி புரிந்து கொள்
அதுவே ஞானம்..
சிவன் அருளால் இன்று போல் என்றும் இன்பமாக இருக்க..

எல்லா நிலைமைகளிலும் நிதானமாய் அமைதியாய் இரு...!!!

எல்லா விஷயங்களையும் நீ மாற்ற முடியாது...!!!!

எல்லா விஷயங்களும் நீ நினைப்பது போல் கிடையாது ...!!!

எல்லா விஷயங்களுக்கும் காரணம் உண்டு...!!!

எல்லா விஷயங்களும் உனக்காக நடப்பதில்லை...!!!

அதனால் நீ அமைதியாய் இருப்பதே நல்லது...!!!

என் செயலால் ஆவது
ஒன்றும் இல்லை...
ஈசனே.. என் நேசனே... இனி
யாவும் நம் சிவாயமே.. என்று உணரப்பெற்றேன்...!!!
ஓம் நமசிவாய... நமஹ...!!!

www.supremeholisticinstitute.com

Eternality Key


www.supremeholisticinstitute.com             

 Who is your life partner ?

Mom
Dad
wife
Son
Husband
Daughter
friends...????

      not at all

Your real life partner
is Your *Body*

Once your body stops responding no one is with you.

*You and your body stay together from Birth till Death.*

What you do to your
body is your
responsibility and
that will come back
to You.

The more you care
for your body, the
more your body will
care for You.

What you eat,
What you do for being Fit,
How u deal with
stress,
How much rest you
give to it..
Will decide how your body gonna respond.

*Remember your body is the only permanent address where You live*

Your body is your asset/liabilty, which no one else can share.

Your body is your
responsibility.
Because...
You are the real
life partner.

*Be Fit  forever*
Take care ur self
Money comes & goes
Relatives & Friends
are not permanent.
*Remember*
No one can help your body other than you.
*Free advice to Healthy Living*
Pranayama - for Lungs
Meditation - for Mind
Yoga-asanas - for Body
Walking - for Heart 
good food - for intestines.

ஓம்கார பிரணவ யோக ரகசியங்கள்.

ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பெருமை

ஓம் என்ற பிரணவ மந்திரத்தின்
பெருமையை பலர் சரியாக இன்னும் உணரவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த மந்திரத்தை கொண்டு பல விஷயங்களை சாதிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ளதை சரியாக கடைபிடித்தோமானால் வெற்றி நிச்சயம்.

கணவன்-மனைவி, காதல்,மாமியார்-மருமகள் போன்ற எந்த உறவு விட பிரச்சனைகளுக்கு:

இரவு தூங்கு முன் கண்மூடி 72 முறை 'ஓம்' என மனதிலேயே தியானித்து கொண்டு மூச்சு விட வேண்டும். அதாவது மூச்சிழித்து வெளிவரும் போது சொல்லி முடிக்க வேண்டும். அப்படி உள்ளிழுத்து வெளி வருவது ஒன்று என கணக்கில் 72 முறை கூறவேண்டும்.

பண பிரச்சனைகளுக்கு 48 முறை

உடல் நலம் பெற 58 முறை

வம்பு, வழக்கு சரியாக 78 முறை

நல்ல வேலை கிடைக்க 80 முறை

கடன் பிரச்சனைகளுக்கு 84 முறை

குழந்தையின்மை 52 முறை

மூச்சு எண்ணிக்கை மிக முக்கியம். மேலும் இதை இரவு உறங்குமுன் கூறுவது நல்ல பலனளிக்கும்.
www.supremeholisticinstitute.com

Friday, September 14, 2018

Shiva Guru Vasi yogam

www.supremeholisticinstitute.com
WHY AUM KRIYA (AUM mudra) IS PRACTICED:
A, U, M the three sounds are the states of the human mind: jagrata, waking consciousness; svapna, the dream state; and susupti, the state of dreamless sleep...
A, U, M is also visva the gross; tejas, the subtle; and prajna, the spiritual bodies of the microcosm, the individual self...
A, U, M also represents the three parts of the microcosm, or Universal Self: gross, the collective intellect, and the divine Isvara the Worshipped One...
With AUM kriya meditate deeply in AUM and merge the individual self with the Supreme Self...


Thursday, September 13, 2018

திருவண்ணாமலை ரகசியங்கள்.

திருவண்ணாமலையில் சித்தர்கள் அதிகம் ஏன்?

திருவண்ணாமலை மலை இருக்கிறதே. அதுவே பிரமாண்டம். பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.

சுமார் 260 கோடி வருடப் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மலையே சிவம்.அதாவது சிவலிங்கம். அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச்
சொல்கின்றனர். இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகின்றன. இதனால்
மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் , சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் வந்து, ஈசனை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதாக ஐதீகம்!

மலையின் மகாத்மியம் மலையளவு இருக்கின்றன. திருவண்ணாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரம், நம்மைப் போன்ற பக்தர்களுக்கான திருத்தலம் தான். ஆனால் அது... சித்தர்களின் பூமி. புனித பூமி. எத்தனையோ சித்தர்கள், இங்கு வந்திருக்கிறார்கள். வந்து
தவமிருந்திருக்கிறார்கள். திரும்ப மனமில்லாமலேயே இங்கேயே தங்கி, ஜுவ சமாதியாகி இன்னும் தவத்தில் மூழ்கியிருக்கிறார்கள். இன்றைக்கும் சூட்சும ரூபமாய் இருந்து, தவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதாக ஐதீகம்!

ஏன் சித்தர்கள் பூமியாக திருவண்ணாமலை இருக்கிறது?

நம் மன அதிர்வுகளை புத்தி தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வராமல் எத்தகைய சித்துக்களையும் செய்ய இயலாது.இயல்பாகவே புவியியல்
அமைப்பிலேயே எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய அதிர்வுகளை கொண்டு திருவண்ணாமலையானது அமைந்துள்ளது.

நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம்,கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். இந்நிலையில் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது.
நம் ஓய்வெடுக்கும் போது(ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் என கூறுகின்றனர். முயற்சி செய்தால் நம் எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள். நம் எண்ணங்களை நம் இயக்கங்களை எளிதாக நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதற்காகவே உலகெங்கிலும் உள்ள சித்தர்கள் இங்கே தேடி
வருகின்றனர்.

திருவண்ணாமலையானது இயல்பாகவே தீட்டா அதிர்வுகளை கொண்டுள்ளது. இதனால் தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். இதற்காகவே இங்கே சித்தர்கள் சமாதி அடைந்திருக்கிறார்கள். சித்தர்களின் பூமியாக திருவண்ணாமலை விளங்கும் மர்மம் இதுதான்..

இறைவன் எங்கு குடியிருக்கிறானோ அங்குதான் சித்தர்களும் குடியிருப்பார்கள். சித்தர்களுக்கு எல்லாம் தலயாயச் சித்தர் ஆதி சித்தர் சிவபெருமான்தான்.தலைவர் இருக்கும் இடத்தில்தானே தொண்டர்களும் குடியிருப்பார்கள்?.அதனால் தான் திருவண்ணாமலையில் சிவ பெருமானுக்கு உறுதுணையாக,காலம் காலமாக நாம் பெரிதும் போற்றும் பதினெட்டு சித்தர்களும், அவர்களுக்கு பக்கபலமாக 188 சித்தர்களும் இன்றும் அரூபமாக நடமாடி கொண்டு இருக்கிறார்கள். கைலாய மலையில் கூட காண கிடைக்காத அதிசயம் இது.

அத்திரி மகரிஷி, மச்ச முனிவர், கோரக்கர், கிராம தேவர், துர்வாசர், சட்டை முனிவர், அகத்தியர், போகர், புசுண்டர், உரோமா மச்சித்தர், யூகி முனிவர், சுந்தரானந்தர், அழகனந்தா, பிரம்ம முனி, காலங்கி நாதர், நந்தி தேவர், தன்வந்திரி, குரு ராஜரிஷி, கொங்கனர், உதயகிரிச் சித்தர்,
பிகுஞ்சக ரிஷி, மேக சஞசார ரிஷி, தத்துவ ஞான சித்தர், காளமீகா ரிஷி, விடன முனிவர், யாகோபு முனிவர், அமுத மகாரிஷி, சூதமா முனிவர், சிவத்தியான முனிவர், பூபால முனிவர், முத்து வீரமா ரிஷி, ஜெயமுனி, சிறு வீரமா முனி, வேதமுனி, சங்கமுனி, காசிபமுனி, பதஞ்சலி முனி, வியாகிரம மகாரிஷி, ஜனகமா முனி,சிவப்பிரம்ம முனி, பராச முனி, வல்ல சித்தர், அஸ்வணி தேவர், குதம்பைச் சித்தர், புண்ணாக்கு சித்தர், யோகச்சித்தர், கஞ்சமலைச் சித்தர், திருமூலநாதர், மவுனச்சித்தர், தேகசித்திக் சித்தர், வரரிஷி, கவு பாலச்சித்தர், மதிராஜ ரிஷி, கவுதமர், தேரையர், விசுவனித் தேவர், அம்பிக்கானந்தர், டமாரானந்தர், கையாட்டிச்சித்தர், கண்ணானந்த
சித்தானந்தர், சச்சிதானந்தர், கணநாதர், சிவானந்தர், சூரியானந்தர், சோகுபானந்தர், தட்சிணா மூர்த்தி, ரமநாதர் மதி சீல மகாமுனி, பெரு அகத்தியன், கம்பளி நாதர், புலஸ்தியர், திரி காலாக்கயான முனி, அருட் சித்தர், கவுன குளிகைச்சித்தர், ராஜரிஷி வசந்தமாமுனி, போதமுனி, காங்கேய ரிஷி, கான்சன முனி, நீயான சமாதிச்சித்தர், சாந்த மஹா ரிஷி, வாசியோகச்சித்தர், வாத சாந்த மகாரிஷி, காலாட்டிச்சித்தர், சத்தரிஷி, தேவ மகரிஷி, பற்ப மகாரிஷி, நவநாதச்சித்தர், அடவிச்சித்தர், நாதந்தச்சித்தர், ஜோதிரிஷி, பிரம்மானந்த ரிஷி, அநுமாதிச்சித்தர், ஜெகராஜ ரிஷி, நாமுனிச்சித்தர், வாசுதேவ மகாரிஷி, பாலையானந்தர், தொழுகன்னிச்சித்தர்....

என இருநூற்றுக்கும் அதிகமான சித்தர்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்ததாகவும் , அவற்றில் சுமார் 25க்கும் அதிகமான சித்தர்கள் இங்கு ஜீவசமாதி ஆனதாகவும் அகத்தியர் தான் இயற்றிய அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் எடுத்துரைத்துள்ளார்
அவற்றுள் தகவல்கள் சேகரித்து கிடைக்க பெற்ற 20 சித்தர்கள் பற்றி ஒவ்வொரு பதிவாக காணலாம்.

திருவண்ணாமலையில் அவதரித்தவர் அருணகிரி நாதர். சிற்றின்ப மோகத்தால் சீரழிந்து வாழ்க்கையில் சலிப்படைந்து, பிறவியை வெறுத்து அண்ணாமலையார் ஆலய வல்லாள மகாராஜன் கோபுரத்தின் மீதிருந்து குதித்து உயிரைப் போக்கிக் கொள்ள முயன்றபோது, முருகப்பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டார். “முத்தைத்தரு’ என அருணகிரிக்கு முருகன் அடியெடுத்துக் கொடுக்க “திருப்புகழ்’ தோன்றியது. 15-ம் நூற்றாண்டிலே திருவண்ணாமலையிலே வாழ்ந்தவர்.

“திருவண்ணாலைக்கு வந்து ஞானகுருவாக இரு’ என்று அண்ணாமலையாரின் நேர்முக அழைப்பினால் ஞானியானவர், சீடரையே
குருவாக்கிய செந்தமிழ் யோகி குகை நமச்சிவாயர்.

திருவண்ணாமலை தீர்த்தக் குளத்து நீரையே திரட்டிக் குடமாக்கி (கி.பி.1290) அதிலேயே தண்ணீரை எடுத்துச் சென்று, அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டவர் சித்த மகா சிவயோகி பாணி பத்திரசாமி.

உண்ணாமுலை அம்மனிடமே உணவைக் கேட்டுப் பாடி தேவியின் திருக்கரங்களால் பொங்கலைப் பெற்றவர். தில்லைக் கோயிலின் திரைச் சீலையிலே தீப்பிடித்ததை திருவண்ணாமலையில் இருந்தபடியே அறிந்த தீயைத் தேய்த்து அணைத்த ஞானச் செல்வர் குரு நமசிவாயர்.

திருவண்ணாமலை ஆதினத்தின் முதல் குருவாகி குன்றக்குடி ஆதினத்தை ஸ்தாபித்தவர் ஸ்ரீலஸ்ரீ தெய்வ சிகாமணி தேசிகர்.

திருவண்ணாமலைப் பகுதியிலே ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க, ஏரியை அமைத்து, உண்ணாமல் தவமிருந்து, மழையைப் பொழிய வைத்து ஊரையே செழிக்க வைத்தவர் மங்கையர்கரசியார்.

தொண்ணூறு வயது வரை நாள்தோறும், திருவண்ணாமலையைத் தவறாமல் வலம் வந்து, அந்தப் புண்ணியதால் அண்ணாமலையானை
நேரில் கண்டு பேறு பெற்றவர் சோணாசலத் தேவர்.

யாழ்பாணத்திலே பிறந்து தில்லையாடியின் பேரருளால் திபரு அருணையிலே பெரும் புதையல் பெற்று, திருக்குளமும், திருமடமும் அமைத்து நல்லறங்களை நாளெல்லாம் கூறி மக்களைக் காத்த ஞானப்பிரகாசர்.

பாதகர்களைத் திருத்துவதற்காக, பழுக்கக் காய்ச்சிய இரும்புச் செருப்பை அணிந்து நடந்தவர் வீரவைராக்கிய மூர்த்தி சுவாமிகள்.

ஐந்நூறு சீடர்களைப் பாடுபட்டு உருவாக்கி, அண்ணாமலையானின் புகழைப் பரப்பியவர். நூல்கள் பலவற்றை எழுதி, சைவ சமயப் பெருமைகளை உலகறியச் செய்த வேதாகம, சமய சாத்திர வித்தகரான அப்பைய தீட்சிதர்.

காணாமற் போன பூஜைப் பேழையை, அண்ணாமலையானின் திருக்கரங்களால் பெறும் பேறு பெற்றவர்; 16-ம் நூற்றாண்டில் குருதேவர்

மடத்தில் தீட்சை பெற்று சிவப்பிரகாசர் எனும் ஞானியைக் கண்ட ஞானமணி குமாரசாமி பண்டாரம்.

வாய் பேச இயலாத ஊமையாய்ப் பிறந்து, திருவண்ணாமலையானின் பேரருளால் பாடும் திறனைப் பெற்றவர். தில்லையிலே திளைத்து, திருவாரூரிலே தியாகேசர் சன்னதி முன்னால் முக்தி பெற்றவர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.

காவிரியாற்றின் நீரையே எண்ணெயாக்கித் தீபமேற்றியவர். பூமியிலிருந்து தீ ஜுவாலையை வரவழைத்து தனது திருமேனியையே அக்னிதேவனுக்கு ஆஹுதியாக்கிய ஆதிசிவப்பிரகாசர் சுவாமிகள்.

கரிகாற்சோழன் காலத்திய பாதாளலிங்க மூர்த்தியை 16-ம் நூற்றாண்டு இறுதியில் பூஜித்தவர். அதே இடத்தில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆயிரங்கால் மண்டபம் கட்டியபோது, பாதாளலிங்கத்தை மாற்றிவிடாமல் பாதுகாத்த ஞானயோகி தம்பிரான் சுவாமிகள்.

தனது மரணத்தைத் தானே உணர்ந்து “ஜீவ சமாதி’ கண்டவர். ஜில்லா கலெக்டர் ஐடன் துரையின் கடும்நோயைத் தீர்த்து வைத்தவர்.
இருபுறமும் வரிப்புலிகள் காவலிருக்க ஞானத்தவம் செய்தவர். ஈசான்ய மடாலயத்தின் ஆதிகுரு (1750-1829) ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள்.

கேரள மாநிலத்தில் பிறந்து, பாரத நாடெங்குமுள்ள புண்ணிய ஷேத்திரங்கள் சென்று வழிபட்டு இறுதியாக தியானத்திற்குகந்த தெய்வத் திருமலை திருவண்ணாமலைதான் எனத் தீர்வு கண்டு மேட மலையில் முருகப் பெருமானுக்கு கோயில் அமைத்த வழிபட்டவர். தனது வாழ்நாள் முழுவதும் மக்களிடம் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு பக்தியை வளர்க்கப் பாடுபட்டவர் சற்குரு சுவாமிகள்.

திருவண்ணாமலை வீதியிலே புரண்ட போது கிடந்து அருவுருவான அண்ணாமலையே உமா மகேஸ்வரன் எனக் கண்டுணர்ந்து தியானித்தபடி வருவோர்க்கெல்லாம் பேரருள் புரிந்து பார் புகழ் பெற்றவர் பத்ராசல சுவாமிகள்.

பழனியிலிருந்த திருவண்ணாமலை வந்து ஆலயத்தில் உழவாரப் பணி புரிந்தவர். தினமும் அன்னக்காவடி சுமந்து அடியார்களின் பசிப்பிணி தீர்த்தவர். ஏழை, எளிய மக்கள் மேல் இரக்கம் கொண்ட சேவை புரிந்தவர் (1922), பாதாள லிங்கக் குகையிலே பால ரமணரைப் பல காலம் பாதுகாத்த சிவ முனிவர் பழனி சுவாமிகள்.

பூமிக்குள் புதைந்து கிடக்கும் புதையலை ஊடுருவி காணும் ஞான விழி பெற்ற புண்ணியத்தால், முடிக்கப்படாது பாதிக்கோபுரமாய் நின்ற திருவண்ணாமலையில் உள்ள வடக்கு கோபுரத்தைப் பூர்த்தி செய்தவர். மக்களின் தீராத நோய்களையெல்லாம் பஞ்சாட்சர மந்திரம் சொல்லித் திருநீறு தந்ததன் மூலம் தீர்த்து வைத்த புனிதவதி அம்மணியம்மாள்.

திருநெல்வேலியிலே அவதரித்துத் திருவருணையிலே முருக தரிசனம் கண்டவர். எல்லையில்லாத் தமிழ் வண்ணப் பாக்களோடு கம்பத்து இளையனார் எனப்படும் திருவண்ணாமலை முருகப் பெருமானுக்கு வேல் கொடுத்து வாழ்த்திய இசைஞானி வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839-1898)

திருவண்ணாலை தீபத்திரு மலைப் பாதையிலே, அங்கம் புரள உருண்டு தவழ்ந்து அன்றாடம் வலம் வருவதையே லட்சியமாய்க் கொண்டவர். திருவண்ணாமலையிலுள்ள அறுபத்து மூவர் மடாலயத்தின் ஆரம்ப கால ஞான குரு அங்கப் பிரதட்சண அண்ணாமலை சுவாமிகள்.

கருவிலேயே திருவுடையவராய் காஞ்சியில் பிறந்து திருவண்ணாமலைத் தலத்தில் வாழ்ந்த மகான் ஞானச் சித்தர் சேஷாத்திரி சுவாமிகள் (1870-1929)

“அண்ணாமலையார்க்கே என்னை ஆளாக்குவேன்’ என்று கன்னிப் பருவம் வரை காத்திருந்தவர். கண்ணுதற் கடவுள் கனவிலே வந்து அருள் புரிந்தார். கண் விழித்ததும் தலைமுடி சடையாகி விட்டிருந்தது. திருவண்ணாமலை சென்று இறுதிவரை ஆலயத்தில் பணியாற்றிய சடைச்சியம்மாள் என்ற ஐடினி சண்முக யோகினி அம்மையார்.

“துறவு கொள்வதே பொது சேவைக்கு உகந்ததென்று’ 36 வயது முதல் 103 வயது வரை (1882-1985) திருவண்ணாமலை மற்றும்
தருமபுரிப்பாதையிலே திருப்பணி பலபுரிந்து, பொது மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளையும், அவசரத் தேவைகளையும்
மேற்கொண்டு, பரிபூரண பக்தியால் அண்ணாமலையானின் பேரருள் பெற்ற “தம்மணம் பட்டி’ அழகானந்த அடிகள்.

உண்ணாமல் உறங்காமல் அண்ணாமலையானின் நினைவிலே பன்னிரண்டு ஆண்டுகள் தனிமையில் கடும் தவம் செய்து தொடர்ந்து மலையிலேயே வாழ்ந்தவர் ராதாபாய் அம்மையார்.

திருவண்ணாமலை மண்ணிலே ஓரடிக்கு 108 லிங்கங்கள் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தியவர். பஞ்சாட்சர நமசிவாயம் 1008 மந்திர ஜபத்துடன் தெய்வீகத் திருமலையை ஒவ்வொரு அடியாக நடந்து கொண்டு வலம் வந்து பேரின்ப ஞானநிலை கண்டு பிறவிப் பிணி தீரப் பெற்றவர் இறை சுவாமிகள்.

1917-ல் பிறந்து ஆயிரத்தெட்டு முறை அண்ணாமலை அங்கப் பிரதட்சண வலம் கண்டவர். தேவர்களும் சித்தர்களும் கிரிவலம் புரிவதை ஞானக்கண்ணால் அறிந்து கூறிய மாதவச் செல்வர் இசக்கி சுவாமிகள்.

திருச்சுழி கிராமத்திலே பிறந்து, மதுரையிலே கல்வி பயின்று, திருவண்ணாமலையானின் நினைவால் திருவருணை வந்து, உண்ணாமல் உறங்காமல் கடும் தவம் மேற்கொண்டு மா தவஞானியாய், மகரிஷியாக உலகப்புகழ் பெற்றவர் ரமண மகரிஷி (1879-1950)

விரட்டுவதற்காக வீசிய கல் பறவையின் உயிரையே வாங்கி விட்டதால் 1918-ல் கங்கைக் கரையிலே பிறந்த அவர் அமைதியைத் தேடி காவிரிக்கரை வரை அலைந்தார். பல ஊர்களும் அலைந்து திரிந்து முடிவிலே ரமண மகரிஷியிடம் சரண் அடைந்தார். குருவருளால் அர்த்தநாரீஸ்வரரின் திருவருள் பெற்றார். அவர்தான் 1959 முதல் குடுகுடுப்பாண்டி போன்ற திருக்கோலமுடன் திருவண்ணாமலையிலே உலா வந்த சிவயோகி, ராம் சுரத்குமார்..

.. ஓம் நமசிவாய
www.supremeholisticinstitute.com

Soul frequency is God's Frequency

Every thing in energy. There is no language other than frequncy and wavelengths in the universe. Try to tune your brain also to experience out of  our 3D world. There are infinite dimensions in the trillions of universal area. Our pineal and pituitary glands are filter to free cosmic energy from the universe.

www.supremeholisticinstitute.com

Tuesday, September 11, 2018

சித்தர்கள் ஞானம்.


 "  உள்ளும்  புறமும்    எங்கும்நிறைபொருளே   நீ  என்  உள்ளும்
புறமும்  ஓயாது ஒளிர்கின்றாய்  .
என்  உள்ளத்தினுள்
உன்னை நான் உணர
 நீ  அருள் புரிவாயாக .
 உள்ளம்
 ஒழுங்காயிருப்பவர்க்கு
 உலகெலாம்
 ஒழுங்குடையதாய்த்
 தென்படுகிறது  .
உள்ளம்கேடடைந்தால்
 உலகமெல்லாம்
 கேடுடையதாய்க்
 காட்சி  கொடுக்கிறது  .
உள்ளத்தை
ஒழுங்குப் படுத்துதல்
ஒன்றே  நம்  கடமை .   உள்ளம்தூயதாகுமளவு
புறமும்  நமக்குத்
 தூயதாய்த்  திகழும் அருளானோர்க்கு
 அகம் புறம் என்று
  உன்னாத
 பூரண ஆனந்த மாகி
 இருள் தீர
 விளங்கு பொருள்
 யாது அந்தப்
  பொருளினை யாம்
  இறைஞ்சி  நிற்பாம்.",!!!!
 ",ஓம் நமசிவய ",
www.supremeholisticinstitute.com

Monday, September 10, 2018

சித்தர்கள் வாசி யோகம்.

மூலவாசல் காமமாகி,
நடுவாசல் வழி அறியா
திகைத்திருக்க,

சரவாசல் கோலங்கொண்டு,
மேல் வாசல் வழியறிந்து,

மௌன வாசலில் நாதங்கண்டு,
ஒளிவாசலில் ஞானமுணர்ந்து,

வெளிவாசலில் சக்தியை கண்டு,
பரவாசலில் பரமனை கண்டேனே.

www.supremeholisticimstitute.com

Sunday, September 9, 2018

சிவகுரு வாசியோகம்

நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு
     நடுசிகர மாகி வாய்வ ...... கரமாகி

நதிமுடிய சார மாகி உதயதிரு மேனி யாகி
     நமசிவய மாமை யாகி ...... எழுதான

அகரவுக ரேத ரோம சகர வுணர் வான சூரன்
     அறிவிலறி வான பூர ...... ணமுமாகும்

அதனைஅடி யேனும் ஓதி இதயகம லாலை யாகி
     மருவுமவ தான போதம் ...... அருள்வாயே

குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி
     குறையகல வேலை மீது ...... தனியூருங்

குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறு
     குலவுதிரை சேரு மாது ...... தனைநாடி

அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி
     அரியமண மேசெய் தேக ...... வலைதேடி

அறுமுகவன் மீக ரான பிறவியம ராசை வீசும்
     அசபைசெகர் சோதி நாத ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நகரம் இரு பாதமாகி மகர(ம்) வயிறாகி ... ('நமசிவய' என்னும்
பஞ்சாக்ஷரத்தில்*1 'ந' என்னும் எழுத்து (நடராஜ மூர்த்தியின்) இரண்டு
பாதங்களாகும். 'ம' என்னும் எழுத்து அவருடைய திரு வயிறு ஆகும்.

மார்பு நடு சிகரம் ஆகி வாய் வகரமாகி நதி முடி ய சாரம்
ஆகி ... நடுவில் உள்ள 'சி' என்னும் எழுத்து அவருடைய மார்பு ஆகும்.
'வ' என்னும் எழுத்து அவருடைய வாய் ஆகும். கங்கையைத் தாங்கிய
திருமுடி, 'ய' என்னும் எழுத்தின் சாரமாக விளங்கும்.

உதய திரு மேனி ஆகி நமசிவய மாமை ஆகி எழு(த்) தான ...
இங்ஙனம் தோன்றி இறைவனது திருமேனியாக விளங்கும் 'நமசிவாய'
என்னும் பஞ்சாக்ஷரம் ஆகிய அழகுடன் கூடிய ஐந்து எழுத்துக்களும்

அகர உகர ஏதர் ஓம சகர உணர்வான சூரன் அறிவில்
அறிவான பூரணமும் ஆகும் ... அகரம், உகரம் என்னும் எழுத்துக்கள்
மூல காரணமாக உள்ளவருடைய ஓம் (அ+உ+ம்) என்று கூடிய
அப்பிரணவத்தின் பொருள் உணர்ந்த சூரபத்மனுடைய*2 அறிவின்
அறிவொளி பரி பூரணப் பொருளாகும்.

அதனை அடியேனும் ஓதி இதய கமல ஆலையாகி மருவும்
அவதான போதம் அருள்வாயே ... அந்தப் பொருளை அடியேனும்
உணர்ந்து, எனது உள்ளத் தாமரையை ஆலயமாகக் கொண்டு விளங்கும்
அனுபவ ஞானத்தை அருள்வாயாக.

குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை
அகல ... (தன் தாய் பார்வதி தேவிக்கு உற்ற சாபத்தைப் பொறாத)
முருகன்*3 தன் அருளையும், ஆண்மையையும் நிரம்பக் காட்டுவதற்காக,
சுறா மீனாகச் சாபம் பெற்ற (சிவ வாகனமாகிய) நந்தி தேவரின் குறை
நீங்குமாறு,

வேலை மீது தனி ஊரும் குழவி வடிவாகவே ... (பார்வதி தேவியும்)
கடற்கரையில் தனியாகக் கிடந்த பெண்குழந்தை வடிவு கொண்டு,

நம் பரதர் தவம் ஆக மீறு குலவு திரை சேரும் மாது தனை
நாடி ... நமது வலைஞர் குலத்தவர் செய்த தவத்தின் பயனாக மிக்கு
எழுகின்ற அலைகள் வீசும் கடற்கரையில் சேர்ந்த செம்படவப்
பெண்ணாக வளர்ந்த பார்வதியைத் தேடி வந்து,

அகில உலகோர்கள் காண அதிசயம் அதாக மேவி ... எல்லா
உலகங்களில் உள்ளவர்களும் பார்க்கும்படி அதிசயமான (வலைஞர்)
உருவத்துடன் வந்து,

அரிய மணமே செய்து ஏகு அவ்வலை தேடி ... அருமையான
திருமணம் செய்து நீங்கிய அந்த 'வலை - தேடி' யாக வந்த
சிவபெருமான்தான்

அறு முக வன் மீகரான ... ஆறு முகத்தராய் எனக்கு விளங்கி வன்மீக
நாதர் என்னும் பெயருடன் (இந்தத் திருவாரூரில்) விளங்கி நிற்க,

பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத
பெருமாளே. ... பிறப்பையும், யம ராஜனையும் (இறப்பையும்) ஒதுக்கித்
தள்ள வல்ல அஜபா*4 மந்திரப் பொருளாகி, உலக மக்கள் காண
ஜோதி வடிவமாய் விளங்கும் பெருமாளே.

ஆதி சிவகுரு வாசியோகம்.

சூட்சும விஞ்ஞானம் :

1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?  நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.

19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது,
     விழிப்புணர்வு அற்ற தியானம்.
     தியானம் என்பது,
     விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.
satya yuga சம் ஸ்தாபன கேந்திரம்.
www.supremeholisticinstitute.com
ஊழ்வினை எது…? ஊழ்வினைப் பயன் என்பது எது…?

விஞ்ஞான அறிவு கொண்டு சாதாரண காகிதத்தில் கெமிக்கல் கலந்த சில நிலைகளைப் பூசி நாடாக்களாக உருவாக்கி அதிலே டேப் ரிகார்ட் (TAPE RECORDER) மூலம் காந்த ஊசி கொண்டு பதிவு செய்கின்றார்கள். இன்று லேசர் மூலம் எலெக்ட்ரானிக் முறைப்படி பதிவு செய்கின்றார்கள்.

அதைப் போல மனிதனுக்குள்ளும் சரி ஒரு மிருகத்திற்குள்ளும் சரி ஒரு புழுவிற்குள்ளும் சரி இதைப் போன்று தான் மற்றொன்றைத் தான் பார்த்துணர்ந்தவைகளைத் தனக்குள் பதிவாக்கி வைத்துக் கொள்ளும்.

மீண்டும் அதை நினைவாக்கப்படும் போது அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த எண்ணங்கள் தன்னைக் காத்திடும் நிலையாக வருகின்றது. அதாவது
1.முதலிலே தான் பதிவு செய்த இந்த உணர்வுகள்
2.மீண்டும் நினைக்கப்படும் போது அதைச் சுவாசிக்கும் போது
3.அது எண்ணமாக வந்து அது இயக்குகின்றது.

இப்படித் தான் புழுவிலிருந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சியில் வருகிற வரையிலும் ஒவ்வொன்றையும் நாம் பதிவு செய்தவைகளின் வலு அதிகமாகக் கூடி அந்த நினைவின் ஆற்றலை நமக்குள் பெருக்கச் செய்து நம் எலும்புக்குள் ஊழாக நாம் எண்ணியதை அது பதிவு செய்யும் போது “ஊழ் வினை…!”

ஒரு தரம் ஒருவர் நம்மை ஏசுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்த உணர்வின் தன்மையை நாம் பதிவு செய்து கொண்டால் அது ரெக்கார்ட் (RECORD) ஆகிவிடுன்றது. அது நம் எலும்புக்குள் ஊழ் வினையாக மாறுகின்றது.

ஒருவருக்கொருவர் சண்டை இடுவதை நாம் உற்றுப் பார்க்கப்படும் போது அது ஆழமாக நமக்குள் பதிவாகி விட்டால் அந்த எண்ணம் மீண்டும் நமக்குள் நினைவு வருகின்றது.

இதைப் போன்று ஊழ் வினையாகப் பதிவு செய்த பின்
1.மீண்டும் நாம் அந்த எண்ணங்களை நினைவு கொள்ளும் போது
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் உந்தப்பட்டு
3.காற்றிலே மறைந்து இருக்கும் அச்சக்தியை நம் உடல் ஈர்த்து நம்மைச் சுவாசிக்கச் செய்து
4.நாம் சுவாசிக்கும் போது அந்த உணர்வின் நிலைகளை எண்ணங்களாக உருவாக்கி
5.அந்த எண்ணத்தின் நிலைகளே சொல்லாக வருவதும்
6.அந்த உணர்வின் தன்மை நம் உடலை அதற்கொப்ப அது இயக்கிக் காட்டுகின்றது.

இதைத்தான் ஊழ்வினை என்பது.

இப்பொழுது வாழ்க்கையில் நாம் எதை எதையெல்லாம் ஆழமான நிலைகளில் கருத்தூன்றி அதைக் கேட்டுணர்ந்து அதை நுகரப்படப்போம் போது அந்த உணர்வின் எண்ணங்களாக வந்தாலும் எவ்வளவு கூர்ந்து கவனிக்கின்றோமோ அந்த அளவுக்குப் பதிவாகின்றது.

1.நம் வாழ்க்கையில் நல்லது நடப்பதற்கும் கெட்டது நடப்பதற்கும்
2.நம் எலும்புக்குள் பதிவு செய்த ஊழ்வினையே காரணமாகின்றது.
3.அதைத் தான் ஊழ்வினைப் பயன் என்பது.

அத்தகைய ஊழ்வினையாக இயக்கும் நிலையை எந்த விஞ்ஞானத்தாலும் மாற்ற முடியாது. அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் ஆழமாகப் பதிவு செய்து அதன் அருகிலேயே இதை வளர்த்தால் தான் அந்தப் பழைய ஊழ்வினையின் இயக்கத்தை மாற்றி நல்ல பயனாக நாம் பெற முடியும்.

யாம் (ஞானகுரு) அடிக்கடி உங்களுக்கு மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்குவதே உங்கள் ஊழ்வினையை மாற்றத்தான்…!

ஆகவே மெய் ஞானிகளின் உணர்வை ஆழமாக உங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் பதிவாக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து வாழுங்கள்.

சித்தர்களை புரிந்துகொள்ளுங்கள்

பொய்க்கால் வைத்துக் கட்டிடம் கட்டுவது போல்தான்... மந்திரம் சொல்வது என்பது – மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால் தான் நாம் நிலைத்த நன்மைகளைப் பெற முடியும்

இப்போது வாழ்க்கையில் எனக்கு இடைஞ்சல் செய்தவனை எண்ணுகின்றேன். “என் பிள்ளை படிக்கவில்லையே... நாளைக்கு எதிர்காலம் என்ன ஆகுமோ...!” என்று நான் எண்ணிச் சிந்திக்கின்றேன்.

அப்பொழுது இந்தச் சிந்தனை எங்கே போகின்றது?

என் பிள்ளை படிக்கவில்லை என்றால் நாளை அவன் எதிர் காலம் என்னவாகும் என்று நான் நினைத்துக் கொண்டே இருந்தேன் என்றால் போதும்...! (ஒரு நல்ல பையனைப் பற்றிக் கூடச் சிந்திக்க மாட்டோம். நல்லது எண்ணத்திற்கு வராது.)

இவன் சொன்னபடி கேட்கவில்லை.... படிப்பு சரியாக இல்லை... என்ற இந்த நிலையில் இருந்தால்
1.அவனைப் பற்றியே எண்ணி
2.அவன் உயர்ந்தவனாக வர வேண்டும் ஆனால் வரவில்லையே என்று எண்ணிக் கொண்டே இருக்கின்றேன் என்றால்
3.நான் இறந்த பிற்பாடு இந்த உயிராத்மா அவன் உடலுக்குள் தான் போகும்.

அவனை எண்ணியே வேதனைப்பட்டேன். அந்த வேதனையான நிலைகள் எனக்குள் நோயாக வந்தது. நோயாக உருவான இந்த உயிராத்மா நான் இறந்த பிற்பாடு என் பையன் உடலில் தான் போகும்.

அங்கே போய் அங்கே நல்லதை விளைய வைக்கின்றதா...? என்றால் இல்லை. அவனை வீழ்த்தச் செய்வேன்.

மந்திரங்கள் தந்திரங்களைக் கற்றுக் கொண்டவர்கள்
1.மனித உடலில் விளைந்த உணர்வு எண்ணங்களைத் தனக்குள் கவர்ந்து கொண்டவர்கள்
2.வாமன அவதாரம் என்று சொல்வார்கள்.

இதுகளெல்லாம் மந்திரத்தாலே அப்போதைக்கு அப்போது அந்தந்தக் காரியங்களை ஜெயித்துக் கொண்டு வந்தவர்கள்.

அதை எல்லாம் “தெய்வப் பண்புகளிலே பார்க்கப்பட்டு...” அந்த உணர்வின் தன்மை திசை திருப்பி அன்றைய வாழ்க்கையை எப்படியோ பொழுது போக்க வேண்டும் என்று செய்வார்கள்.

வீட்டில் மாடி கட்டுவதற்கு பொய்ப் பந்தலைக் கட்டி அதன் மேலே தளம் சுவர் எழுப்பிக் கட்டுவோம். செய்து முடித்தபின் பொய்ப் பந்தலை உடனுக்குடனே எடுத்து விடுவது போல் தான் மந்திரம் சொல்வதை அது நிரந்தரமாகக் கட்டி விட்டார்கள்.

1.மனித உடலிலே விளைய வைத்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ள
2.இந்த மனித வாழ்க்கையிலே தன்னுடைய பேருக்கும் புகழுக்கும்
3.தன் சுகபோகங்களுக்கும் எண்ணி எடுத்துக் கொண்டது தான் இந்த மந்திர ஒலிகள்.

அந்த மந்திர ஒலிகள் எங்கிருந்து வந்தது?

ஒரு மனித உடலில் விளைய வைத்த அந்த எண்ணங்களைக் கவர்ந்து தனக்குள் அது உருவாக்கித் தன்னுடன் இயக்கச் செய்யும் நிலையே அது.

சந்தர்ப்பத்தால் நாம் எடுக்கும் குணம் கொண்டு ஒரு ஆன்மா நம் உடலில் எப்படி நுழைந்து விடுகின்றதோ இதைப்போல
1.செயற்கையில் ஒரு மனிதன் மந்திர ஒலிகளைப் பரப்பச் செய்து
2.அந்த மந்திரத்தை எவன் உருவாக்கினானோ
3.அந்த மந்திர ஒலி கொண்டே மீண்டும் தனக்குள் கவர்ந்து
4.இன்னொரு ஆத்மாவினுடைய செயலைத் தனக்குள் கவர்ந்து கொள்வது
5.இது தான் மந்திரம்.

கவர்ந்து கொண்ட நிலைகள் கொண்டு  சில காலம் இன்னொரு உடலுக்குள் போய்ப் பேயாகவும் அருளாகவும் தெய்வமாகவும் செயல்படுத்தி மாற்றிக் காட்டலாம்.

பல வித்தைகளைச் செய்து காட்டலாம். ஆனால் பயன் ஒன்றுமே இல்லை. அப்படிச் செய்தவர்கள் அனைத்தும் மீண்டும் விஷத்தின் தன்மை கொண்டு பாம்பாகவோ தேளாகவோப் பிறந்து தான் மீண்டும் மனிதனாக வரவேண்டும்.

இதைப்போல நாம் மந்திரம் என்ற இந்த நிலைகளில் இருந்து விடுபட்டு பத்தாவது நிலையான கல்கி என்ற நிலையில் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.

ஏனென்றால் நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நம்மை அறியாமல் நமக்குள் சென்ற இந்த அழுக்கினைத் துடைக்கத்தான் இந்தத் தியானம்.

தியானம் என்பது வேறு என்னமோ என்று நினைத்துக் கொள்கின்றார்கள்.

நமக்கு எப்போது இடைஞ்சல் வருகின்றதோ அந்த இடைஞ்சல் நமக்குள் ஒட்டாது "ஈஸ்வரா..." என்று தன் உயிரை வேண்டி விண்ணை நோக்கி எண்ணங்களைச் செலுத்த வேண்டும்.

அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி அந்தச் சக்திகளைக் கவர்ந்து நம் உடல் முழுவதும் பரப்பச் செய்வது தான் இந்தத் தியானம்.

செய்து பாருங்கள்.

சித்தர்கள் யோகம்

தீய வினைகளையும் நோய்களையும் நீக்கும் விண்ணின் ஆற்றலைப் பெறுங்கள் - "பேராற்றல் மிக்கவர்களாக ஆவீர்கள்"

1. புற்று நோய்

பண்டைய காலங்களில் நோயினால் வேதனைப்பட்டவர்கள் உண்டு, கேன்சர் என்ற நோயும் உண்டு. அன்று புற்று நோய் என்றார்கள்.

புற்று எப்படி தனக்குள் கண் வைத்து வளருகின்றதோ அதைப் போல எடுத்துக் கொண்ட அணுவின் தன்மைதான் தொடர் வரிசையில் தன் இனத்தைப் பெருக்கி மற்ற உணர்வின் தன்மையைக் கொன்று கொண்டேயிருக்கும்.

2. எலும்புருக்கி நோய்

இப்பொழுது மனிதனாக இருக்கும் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் ஆன்மாவாக ஆகும் பொழுது எதிர் நிலையான தன்மைகள் பட்டவுடன் நஞ்சு கொண்ட உணர்வின் அணுவாகின்றது.

நஞ்சான அணுவாக அது விளைந்து நமக்குள் இருக்கும் இரத்தத்தை அது தன் உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது. உணவாக உட்கொண்டு அதன் மலத்தை நமக்குள் இடும்போது தசைகள் கரைந்து எலும்பு வரை ஊடுருவுகின்றது.

எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள்ளும் அணுக்கள் இருக்கின்றது. சந்தர்ப்பவசத்தால் வாழ்க்கையில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதிர்நிலையாகப்படும் பொழுது பாசத்தால் வேதனைப்பட்டு நமக்குள் இணைத்து கொண்ட உணர்வுகள் நம் எலும்புக்குள் ஊழ்வினையாகச் சேர்க்கப்படுகின்றது.

அப்படிச் சேர்க்கப்படும் பொழுது உணர்வின் ஆற்றல் பெருகும் பொழுது இதற்குள் நெகடிவ், பாசிடிவ் என்று எலும்புக்குள் உயிர் அணுக்கள் உண்டாகி அது நம் ஊனை உணவாகச் உட்கொண்டு தன் மலத்தை வெளிவிடும் பொழுது எலும்புகள் உருகி எலும்புருக்கி நோய் உருவாகிறது.

3, விஞ்ஞானிகள் செய்யும் கிருமிப் போர்

ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டு இதனை நீக்குவதற்கு எதிர் கிருமிகளை உருவாக்குகின்றனர்.

அதற்குண்டான ஊட்டச் சத்தினைக் கொடுத்து விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த அணுக்கள் உணவாக உட்கொண்டு மலத்தை அது இடும் பொழுது உடலிலே உருவான தீய அணுக்களைக் கொல்கின்றது.

கழிப்பறையிலே விளையும் புழுவை நல்ல நீருக்குள் போட்டால் அது மடிந்துவிடும், நல்ல நீருக்குள் விளையும் புழுவைக் கழிப்பறையிலே போட்டால் அதுவும் மடிந்துவிடும்.

ஆக, இதைப் போல விஞ்ஞான அறிவு கொண்டு கிருமிகளை உருவாக்கி “கிருமிப் போர்…” என்ற முறைகளில் இன்று விஞ்ஞானிகள் செயல்படுகின்றனர்.

4. நோய்களை நீக்க மெய்ஞானிகள் பாய்ச்சும் விண்வெளியின் ஆற்றல்

அன்று மெய்ஞானிகளோ விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் எடுத்து எதிர்நிலையான உணர்வு உருவாகும் அந்த நட்சத்திரத்தின் உணர்வைத் தனக்குள் சுவாசித்து அந்த ஆற்றல் மிக்க நிலையைத் தன் கண் பார்வையில் செலுத்தி வாக்கின் சொல்லால் நோயுற்றவருக்குள் ஊடுருவச் செய்தனர்.

உனக்கு இந்த நோய் இல்லை இது நீங்கிவிடும் என்ற உணர்வினை உடலில் பாய்ச்சி அந்த உணர்வினை ஊழ்வினையாக்கி தீய வினைகளை மாய்த்து அது வளரும் பொழுது எலும்புருக்கி நோயும் அங்கே மடிகின்றது.
இப்படிச் செய்தனர் அன்றைய மெய்ஞானிகள்.
புற்று நோயையும் தன் கண் பார்வையில் விண்வெளியின் ஆற்றலை நுகர்ந்து உணர்வின் ஆற்றலை அங்கே பாய்ச்சி அதனை நீக்கியவர்கள் மகாஞானிகள்.

விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி தன் உணர்வின் மூச்சலைகளைப் பாய்ச்சி தீமை விளைவிக்கும் உணர்வின் தன்மையைத் தடைப்படுத்தி நிறுத்தினார்கள்.

அதுதான் சதுர்த்தி என்ற நிலைகள். தன் வாக்கினைப் அங்கே பாய்ச்சி தீமைகளை நீக்கினார்கள் அந்த மகா ஞானிகள்.

5. விண்ணுலக ஆற்றலை நமக்குள் சேர்க்க மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டும் வழி

இதே போன்றுதான் நான் என்னையறியாது பல தீய செயல்களைச் செய்தாலும், தீய செயல்களாக எனக்குள் ஊழ்வினையாகப் பதிவானாலும், அந்த உணர்வின் தன்மைகள் எனக்குள் வளராது தடைப்படுத்தும் வழியை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

அவர் காட்டிய அருள் வழியில் விண்ணுலகை எட்டிப்பார்த்து அந்த உணர்வின் தன்மையை எப்படிப் பெருக்க வேண்டும் என்றும் அந்த உணர்வின் நினைவலைகளை அங்கே பாய்ச்சி அந்த நினைவலைகளை எனக்குள் சுவாசிக்கச் செய்தார்.

இந்த உணர்வின் ஆற்றலை எனக்குள் வினையாகச் சேர்த்து இந்த உணர்வுகளை எமக்குள் பெருக்கும்படி செய்தார்.

முந்தைய நிலைகள் ஊழ்வினையாக இருந்தாலும் அதன் செயலாக்கத்தை
1.உன் உடலிலுள்ள தசைகளாக மாற்றும்.., தசைகளை உருவாக்கும் அணுக்களுக்குள்
2.நீ விண்ணின் ஆற்றலைச் சேர்த்துக் கொள்
3.இந்த வினையின் தன்மையை உனக்குள் சேர்த்துக் கொள்
4.மெய்ஞானியின் உணர்வலைகளை ஊழ்வினையாக இணைத்துக்கொள்
என்று குருநாதர் கூறினார்.

நீங்களும் உங்கள் எண்ணத்தை விண்ணிலே பாய்ச்சுங்கள். விண்ணின் ஆற்றலைப் பெறுங்கள். அந்த மெய்ஞானிகள் பெற்ற பேராற்றலை உங்களுக்குள்ளும் வளர்த்துக் கொள்ளுங்கள்.