" உள்ளும் புறமும் எங்கும்நிறைபொருளே நீ என் உள்ளும்
புறமும் ஓயாது ஒளிர்கின்றாய் .
என் உள்ளத்தினுள்
உன்னை நான் உணர
நீ அருள் புரிவாயாக .
உள்ளம்
ஒழுங்காயிருப்பவர்க்கு
உலகெலாம்
ஒழுங்குடையதாய்த்
தென்படுகிறது .
உள்ளம்கேடடைந்தால்
உலகமெல்லாம்
கேடுடையதாய்க்
காட்சி கொடுக்கிறது .
உள்ளத்தை
ஒழுங்குப் படுத்துதல்
ஒன்றே நம் கடமை . உள்ளம்தூயதாகுமளவு
புறமும் நமக்குத்
தூயதாய்த் திகழும் அருளானோர்க்கு
அகம் புறம் என்று
உன்னாத
பூரண ஆனந்த மாகி
இருள் தீர
விளங்கு பொருள்
யாது அந்தப்
பொருளினை யாம்
இறைஞ்சி நிற்பாம்.",!!!!
",ஓம் நமசிவய ",
www.supremeholisticinstitute.com

No comments:
Post a Comment